மண்ணில் கால் வைக்க

மண்ணில் கால்வைக்க விரும்பாத
தாவரம் ஒன்று ஞானாட்சரி
உனது வீட்டுச் சுவரில் வளர்கிறது
அது
பூப்பதும் இல்லை காய்ப்பதும் இல்லை
ஆனால் வளர்கிறது
வளரும் அதன் சுகத்துக்காக.

1995