உபாயம்

வெட்டலாம் பிசையலாம் வாழைப்பழத்தை.
உரிக்கலாம் உடைக்கலாம் தேங்காய் நெற்றை.
கிள்ளலாம் பூவை. கசக்கலாம் இதழ்களை.
அது அது எப்படி அழிவதென்பது
அதனதன் இடமே தெளிவாய் உள்ளது
அது அது அவற்றை அறியாத போதும்.
நீயே அறிவாய் என்னை
என்ன செய்தால் அழிக்கலாம் என்பதை.