பல மரணஸ்தர்

இருமுறை பிறப்பதாய் சொல்லப்படுகின்ற
அந்தணர் கூட ஒருமுறைதான் இறப்பார்.
ஆனால் கவிஞனோ பலமுறை இறக்கிறான்.
எல்லோரையும்போல் ஒருமுறை. மற்றவர்
படிக்கப் படிக்கப் பலமுறை பலமுறை.

2001