லூசி க்ரே

ரங்கா ரங்கா
என்ன பார்க்கிறாய் என்றார்கள்
சாணைக் கல்லில்
தீப்பொறி பறப்பதைப்
பார்க்கிறேன் என்றேன்
சிரித்தார்கள்

ரங்கா ரங்கா
என்ன பார்க்கிறாய் என்றார்கள்
குளத்தின் நீரை
உறிஞ்சி வெளியேற்றும்
இயந்திரத்தின்
குபுகுபு குபுகுபு ஒலியைக்
கேட்கிறேன் என்றேன்
சிரித்தார்கள்

மழை பெய்த இரவில்
தனியே சென்றை என்னை
ரங்கா ரங்கா
எங்கே போகிறாய் என்றார்கள்

கையில் லாந்தர் விளக்கோடு
டவுனுக்குப் போன லூசியைத்
தொடர்கிறேன் என்றேன் – ரொம்பப்
படிக்கிறான் அதுதான் என்றார்கள்.

2000